Tuesday 9 July 2019

யாரு தச்ச பைய்யி.. எங்க அம்மா தன் கையாலேயே எனக்காக தச்சாங்க.. நெகிழும் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட்டையும் சூட்கேஸையும் பிரிக்க முடியாது என்ற 100 ஆண்டுகள் மரபை மாற்றி, நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிற பையை தயாரித்தது யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பட்ஜெட் அறிக்கைகள் எப்போதும் சூட்கேஸில்தான் கொண்டு செல்வது வழக்கம். இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபாகும். இந்த மரபை கடந்த 1860-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசவையில் வில்லியம் கிளாட்ஸ்டோன் அறிமுகம் செய்தார்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததை அடுத்து கடந்த ஆண்டு வரை , இன்னும் ஏன் இந்த ஆண்டு வெளியான இடைக்கால பட்ஜெட் வரை அதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

ஆச்சரியம்

இந்த நிலையில் மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பாஜக அரசு கடந்த ஜூலை 5-ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதற்கு முன்னதாக நிதி அமைச்சகத்திலிருந்து பட்ஜெட் அறிக்கைகளுடன் வெளியே வந்த நிர்மலா சீதாராமனை பார்த்த செய்தியாளர்களுக்கு ஆச்சரியம்.

அறிக்கைகள்

ஏனெனில் அவரது கையில் வழக்கமாக இருக்கும் பெட்டிக்கு பதிலாக சிவப்பு நிறத்தினாலான பை இருந்தது. அதில்தான் பட்ஜெட் உரைகள் இருந்தன. பட்ஜெட்டை விட அதன் அறிக்கைகள் இருந்த உரைதான் அன்று முழுவதும் பேசப்பட்டது.

அடையாளம்

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், நிர்மலா சீதாராமன் சிவப்பு உறையில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்தது மேற்கத்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான அடையாளமாக உள்ளது என்பதையே குறிக்கும் என்றார்.

ரகிசயம்

எனினும் அந்த பையை யார் தைத்து கொடுத்தார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிவப்பு பையை தைத்து கொடுத்தது யார் என்ற ரகசியத்தை செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் உடைத்தார். அவர் கூறுகையில் சூட்கேஸ் எடுத்துச் செல்லும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.

அடையாளம்

அது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் பட்ஜெட் உறையை தன்னுடைய அம்மா, அவரது கைகளால் தைத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அந்த பையை மும்பை சித்தி விநாயகர் கோயில் மற்றும் மகாலட்சுமி கோயிலில் வைத்து பூஜை செய்து கொடுத்தார். எனினும் அந்த பை நம் வீட்டு பை போல் இல்லாமல் இருக்கவும் அரசினுடையது என்ற அடையாளம் காணவும் அதில் அசோக சக்கரத்தை பதித்தேன் என்றார்.

No comments:

Post a Comment