Sunday 12 August 2018

சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 11 - 15 வரை ரிலையன்ஸ் டிஜிட்டலின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை!

ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11 முதல் 15 வரை `டிஜிட்டல் இந்தியா சேல்’ என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்பனை நிறுவனமான `ரிலையன்ஸ் டிஜிட்டல்’, சுதந்திர தினத்தை முன்னிட்டு `டிஜிட்டல் இந்தியா சேல்’ என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்கிறது. இந்தத் தள்ளுபடி விற்பனை, ஆகஸ்ட் 11 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் இருக்கும் ரிலையன்ஸ் கடைகளில் நடைபெறுகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிட்டி பேங், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோடெக் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்பத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ் பேக் தள்ளுபடியும் வழங்குகிறது. எந்தவித முன்பணமும் கட்டாமல் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இருக்கும் 800-க்கும் அதிகமான ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ கடைகளிலும் இந்தத் தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் கிடைக்கும் அனைத்து வகையான எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கும் இந்தத் தள்ளுபடி வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.10,990 மதிப்புள்ள ஹெச்டி எல்.ஈ.டி டி.விக்கும் தள்ளுபடி உண்டு. லேப்டாப் வாங்கினால் ஆல் இன் ஒன் பிரின்ட்டர் மற்றும் ஸ்பீக்கர் இலவசம். ரூ.11,490 விலையுள்ள ஃபிரிட்ஜ், ரூ.10,490 விலையுள்ள வாஷிங்மெஷினுக்கும் தள்ளுபடி வழங்குகிறது. குறைந்த, தள்ளுபடி விலையில் ஸ்மார்போன்கள் விற்கப்படுகின்றன. அதேபோல, வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக சரியான நேரத்தில் பொருள்கள் கொண்டு சேர்க்கப்பட்டு, இலவசமாக இன்ஸ்டாலேசனும் செய்துதரப்படும் என்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் கூறியுள்ளது.

சிறிய பொருளோ, பெரிய பொருளோ, வாடிக்கையாளர்களின் தேவையை கவனத்தில் கொண்டு, 200 சர்வதேச மற்றும் இந்திய உற்பத்தியாளர்களின் 4000 பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஈ.டி மற்றும் எல்.சி.டி டிவிகள், ஹோம் தியேட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், மொபைல்போன்கள் மற்றும் இதர தொழில்நுட்பப் பொருள்களும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment