Monday 13 August 2018

117 கிலோ எடையிலிருந்த நான் எப்படி 75 கிலோ எடைக்கு மாறினேன்! இசையமைப்பாளர் இமான் சொன்ன ரகசியம்

பிரபல இசையமைப்பாளரான இமான் முடியாதது என்று எதுவும் இல்லை என்று கூறி தன்னுடைய எடை எப்படி குறைந்தது என்பது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இசையமைப்பாளரான டி.இமான் தற்போது தன்னுடைய இசையால் பலரையும் ஈர்த்து வருகிறார். முன்பு அதிக எடை போட்டு காணப்பட்ட இமான் சமீபத்தில் ஒரு சின்னப் பையன் போன்று மாறி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

இமான் தானா இவர் என்றளவிற்கு தன்னுடைய எடையை குறைத்துவிட்டார். பலரும் எப்படி நீங்கள் எடையை குறைத்தீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முடியாதது என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு, பலரும் தன்னுடைய இந்த பிட்னசைக் கண்டு கேள்வி எழுப்பி வருகிறன்றனர்.

அதற்கு காரணம் கடின உழைப்பு தான், நான் என்னுடைய சிறு வயதில் இருந்தே, பிட்டாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அப்போது பள்ளிக்கு செல்வது, அதன் பின் ரிக்கார்டிங் என இப்படி இருந்ததால், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர வேண்டு சூழ்நிலைய ஏற்பட்டது.

இதன் காரணமாக தன்னுடைய எடை அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி உணவு பழக்கவழங்களும் காரணமாக இருந்தன.

அதன் பின் சரியாக ஜிம்முக்கு செல்வது, முறையாக டயட் மெய்டன் பண்ணியதே தற்போதைய தன்னுடைய இந்த மாற்றத்திற்கு காரணம் எனவும், 117 கிலோ எடையிலிருந்து 75 கிலோ எடைக்கு மாறியிருக்கிறேன். ஒரு ஆண்டுகளில் மட்டும் 42 கிலோ எடை குறைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கு காரணமான சிலருக்கும் அதில் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். இந்த தகவல் யாரேனும் ஒருவருக்கு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment