22 இடங்களில் வெட்டு வாங்கிய கமல் படம்!

கமலின் ‘விஸ்வரூபம் 2’ படம் 22 இடங்களில் சென்சார் குழுவிடம் வெட்டு வாங்கியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்...

கமலின் ‘விஸ்வரூபம் 2’ படம் 22 இடங்களில் சென்சார் குழுவிடம் வெட்டு வாங்கியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்தை கமலே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகிகளாக பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் நாளை (10ம் தேதி) வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.


இந்நிலையில் தற்போது படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு 22 இடங்களில் வெட்டு போடப்பட்டுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் டீஸர்ஆகியவை இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் நாளை வெளியாகப் போகும் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடும் என்றே தெரிகிறது

மேலும் பல...

0 comments