எம்.ஜி.ஆர்., சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி

தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் கதாநாயகனாக அறிமுகமான  படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதிதான்....

தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் கதாநாயகனாக அறிமுகமான  படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதிதான்.

எம்.ஜி.ஆர். 1936-இல் வெளியான சதி லீலாவதி என்னும் படத்தில் முதன்முதலாக நடித்தார். அப்படத்தில், அவருக்கு சிறிய வேடம் தான் கிடைத்தது. அதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு அவர் பல படங்களில் நடித்தபோதும் கதாநாயகனாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், 1947-இல் வெளியான ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆர்., முதன்முறையாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனினும், படத்தின் டைட்டிலில் வசனம் என்று கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லை. வசன உதவி என்று தான் இடம்பெற்றிருந்தது.

இதேபோல், சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படத்துக்கும் கருணாநிதிதான் வசனம் எழுதினார். இந்தப் படத்தில் இடம்பெறும் நீதிமன்றக் காட்சியில் சிவாஜி பேசும் வசனங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. கருணாநிதியின் எழுத்து ஆளுமைக்கு இந்த படம் சிறந்த உதாரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive