Wednesday 26 September 2018

‘இந்தியன்’ படத்தை அடுத்து தொடரும் ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இந்த வாரத்தில் முடிவு பெறுகிறது. மேலும் இவர் அரசியல் கட்சியைத் தொடங்கி அதையும் நிர்வகித்து வருகிறார்.இனிமேல் படங்களில் நடிக்கமாட்டார். ‘இந்தியன் 2’ படம் தான் கடைசியாக இருக்கும் என்று கூறி வந்தனர்.

ஆனால் தற்போது ஒரு புதிய செய்தி வந்துள்ளது. ஆம் ‘இந்தியன் 2’ படத்தை அடுத்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அது வேறு எந்த புது படமும் இல்லை.
ஏற்கெனவே கமல் & இளையராஜா & பி.சி. ஸ்ரீராம் கூட்டணியில் வெளியான ‘தேவர்மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment