Friday, 19 July 2019

வாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே

மறுபடியும் அத்திவரதரை தரிசிக்க முடியாது என்பதால்தான் போய் சாமி கும்பிட்டேன். இதுக்கு ஏன் இப்படி பிரச்சினை பண்றாங்க என்று பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கேட்டுள்ளார்.
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு, அத்திவரதரை சந்திக்க சிறப்பு அனுமதி தந்தது யார் என்ற கேள்வி கடந்த 4 நாட்களாக எழுந்து வருகிறது.

நேற்றுகூட கூட்ட நெரிசலில் 4 பேர் சிக்கி உயிரிழந்த நிலையில், ஒரு ரவுடிக்கு அத்திவரதர் சன்னிதியில் பரிவட்டம் கட்டப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது ஏன், இதற்கு யார் காரணம் என்று சலசலக்கப்பட்டு வந்தது.

திமுகதான்

இந்த வீடியோவும் வைரலானதை அடுத்து காஞ்சிபுரம் கலெக்டர், "வரிச்சியூர் செல்வத்தை கூட்டி வந்ததே திமுகவினர்தான்" என்று விளக்கம் சொல்லி உள்ளார். இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் ஒருவீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அத்திவரதர் கோயிலுக்கு சென்றது முதல் தன் அன்றாட வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு சொல்லி உள்ளார்.

பெரிய பிரச்சனை

அத்திவரதரை கும்பிட வாய்ப்புக்கு கிடைக்காது. அதுக்காக போனேன். ஆனால் இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார் இருக்கு. நான் விவிஐபி இல்லையா? எனக்கு நாலு பேரன் பேத்தி. 2 பொண்ணுங்களுக்கும் 2, 2 பிள்ளைங்க. நான் இப்போ தாதா இல்லை, தாத்தா! என் டிரஸ் ஏன் இப்படி இருக்குன்னா, நான் சினிமாவில நடிக்கிறேன். அதனால நான் எல்லார்கிட்டயும் நான் மாறுபட்டு தெரியணும்னு இப்படி ஆடை அலங்காரமா இருக்கேன்.

போலீஸ்

நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். என்னை பத்தி தப்பு தப்பா எழுதறாங்க. அதனால பத்திரிகை ரிப்போர்ட்டர் ஆகணும்னு எனக்கு ஆசை. நான் செஞ்சது வெறும் 3,4 தப்புண்ணாலும் போலீஸ் போட்டது நிறைய வழக்கு.

ஜாலி வாழ்க்கை

காலைல 11 மணிக்கு எழுந்திருப்பேன் சாமி. குளிச்சிட்டு சினிமாவுக்கு போய்டுவேன். நான் போகாத படமே இல்லை. இதுதான் என் பொழுதுபோக்கு. வாரத்துல வெள்ளிக்கிழமை சென்னைக்கு கிளம்பிடுவேன். அங்கு பப்பு-க்கு போயிடுவேன். வெள்ளிக்கிழமை நைட், சனிக்கிழமை நைட், ஞாயிற்றுக்கிழமையில் பப்பில்தான் இருப்பேன். இது ரிடையர்ட்மென்ட் வாழக்கை பாருங்க. அதனால ஜாலியா அனுபவிக்கணும்.

ரோல் மாடல்

வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே.. 9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு.. அவர்தான் என் குரு. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு.

என் குரு

ஏன்னு கேளுங்க.. வாழ்க்கையில ஏழைய பொறக்கிறது ஒன்னும் நம்ம தப்பு கிடையாது சாமி. ஆனா சாகும்போது ஏழையா சாககூடாது. அவர் தப்பு பண்றாரு, இல்லையான்றது இல்லை, அவர் எத்தனையோ கோடிக்கணக்குல பேங்குல கட்டி இருக்காரு. ஆனா என்னுடைய ரோல் மாடல் குரு.. அவருதான்.

பிறந்த நாள்

என் வயசுல என் அப்பா, என் ஐயா இப்படி 4 பேருமே 50 வயசில உயிரோடு இல்லை. 2 மகள்களுக்கு கல்யாணம் பண்ணேன். ஆனால் ஊருல யாருக்குமே சாப்பாடு போடல. அதனால என் 50-வது பிறந்த நாள் அன்னைக்கு எங்க ஊர்ல 100 கிடா வெட்டினேன், 4 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை தந்தேன். 4 ஆயிரம் ஆண்களுக்கு வேட்டி குடுத்தேன். என் பங்ஷனுக்கு மட்டும் அன்னைக்கு 30 ஆயிரம் பேர் வந்திருந்தாங்க. என் ஊர் மக்கள் சந்தோஷமா இருக்கணும்னு சொல்லி, அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேஷியாவில் இருந்து 4 பொண்ணுங்களை கூட்டி வந்து பெல்லி டான்ஸ் போட்டேன்" என்றார்.


No comments:

Post a Comment