Friday 19 July 2019

கடாரம் கொண்டான் - திரை விமர்சனம்

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா?

கதைக்களம்

விக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே அடிப்பட்டு இரண்டு பேரால் துரத்தப்பட்டு வருகின்றார். அப்படியிருக்க அவரை ஒரு பைக் மோத, அந்த இடத்திலேயே மயக்கமடைகின்றார், அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர் போலிஸார்.

அந்த மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் தான் அபிஹாசன், தன் மனைவி அக்‌ஷரா கர்ப்பமாக இருக்க, அவரை தனியே வீட்டில் இருக்க வைத்துவிட்டு, நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறார்.

அப்படி ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வர, அபியை அடித்துவிட்டு அக்‌ஷராவை ஒருவர் கடத்த, பிறகு விக்ரமை அந்த மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டப்படுகின்றார். அவரும் வேறு வழியில்லாமல் விக்ரமை வெளியே கொண்டு வர, அதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இந்த கடாரம் கொண்டான்.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் என்ன கதாபாத்திரம் கொடுங்க நான் ரெடிப்பா என்று மிரட்டிவிடுகின்றார், அப்படித்தான் இந்த கேகே கதாபாத்திரமும், ஏதோ ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கின்றார், படத்தில் இவர் பேசும் வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், 10 நிமிடம் பேசினாலே அதிகம்.

ஏனெனில் விக்ரம் வருவதே குறைந்த நேரம் தான், ஆம், விக்ரமை விட ஸ்கிரீனில் நிறைய வருவது அபிஹாசன் தான், ஆனால், அவரும் முதல் படம் என்பது போலவே தெரியாமல் தன் மனைவியை தேடும் கணவனாக முகத்தில் பதட்டமும், வலியையும் நன்கு கொண்டு வந்துள்ளார், ஆனாலும், நல்ல எமோஷ்னல் காட்சியில் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.

அக்‌ஷரா ஹாசன் வெறுமென வந்து செல்வார் என்று பார்த்தால், க்ளைமேக்ஸில், அந்த போலிஸிடம் மோதும் காட்சி, நம்மை பதட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றது, படத்தின் மிக முக்கியமான ஹைபாயிண்ட் அந்த காட்சியை சொல்லலாம்.

இதை தாண்டி நிறைய புதுமுகங்கள் தான் படத்தில், அதிலும் மலேசியா களம், அதனாலேயே நாம் தமிழ் படம் தான் பார்க்கின்றோமோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது, அடுத்தடுத்து என்ன, யார் இதை செய்தது என்ற பதட்டம் பெரியளவில் ஆடியன்ஸிற்கு வரவில்லை. அது தான் கொஞ்சம் மைனஸ்.

படத்தின் மிகப்பெரிய டுவிஸ்டும் இடைவேளை போதே ஓபன் ஆகின்றது, அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் ஏதோ டுவிஸ்ட் உள்ளது என்று நினைத்தால், ப்ளாட்டாக சென்று படமே முடிந்துவிடுகின்றது. விக்ரம் படம் முழுவதும் செம்ம ஸ்டைலிஷாக வந்தாலும், கூஸ்பம்ஸ் என்று சொல்லும்படி ஒரு காட்சியும் இல்லை என்பது வருத்தம்.

மேலும், படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், இவை எல்லாத்தையும் விட படத்தையே தாங்கிப்பிடிப்பது ஜிப்ரானின் பின்னணி இசை தான், மிரட்டல்.

க்ளாப்ஸ்

விக்ரம் வழக்கம் போல் தனக்கெரிய உரிய ஸ்டைலில் ஸ்கோர் செய்துள்ளார்.

அக்‌ஷரா ஹாசன், லேடி போலிஸ் மோதிக்கொள்ளும் காட்சி. மேலும் பைக் ஸ்டெண்ட் காட்சிகள்

படத்தின் இரண்டாம் பாதி, முதல் பாதியை விட கொஞ்சம் வேகமாக செல்கின்றது.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக ஜிப்ரானின் இசை.

பல்ப்ஸ்

பெரிய டுவிஸ்ட், சஸ்பென்ஸ் என இல்லாதது.

முதல் பாதி மிக மெதுவாக நகரும் காட்சிகள்.

மொத்ததில் பெரிய பரபரப்பு இல்லை என்றாலும், எங்கும் நம்மை போர் அடிக்காமல் கொண்டு சென்றதே இந்த கடராம் கொண்டானின் வெற்றி.

No comments:

Post a Comment