Wednesday 3 July 2019

கிணற்றில் நீர் எடுக்க குலுக்கல் முறை: புலம்பும் சென்னைவாசிகள்!

நகரங்களில் பல இடங்களில் பொது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ தண்ணீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் 17-ம் தேதி ஒரு லாரி தண்ணீர் ஆர்டர் செய்த 68 வயதான சேஷாத்ரி இதுவரையில் காத்துக்கொண்டிருக்கிறார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மெட்ரோ குடிநீர் நிலைய கிளை அலுவலகத்துக்கு இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட முறை அலைந்துவிட்டார். ஆனால், இதுவரையில் அவருக்கான தண்ணீர் லாரி டெலிவரி தேதி குறித்த எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

தண்ணீர்ப் பிரச்னை எப்போதும் சாதாரண பொதுமக்களையே பாடாய்ப்படுத்தும். ஆனால், இம்முறை பொதுமக்கள், கார்ப்பரேட் என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்தத் தண்ணீர் பஞ்சம். தண்ணீர் பஞ்சத்தின் உட்சமாக சென்னையில் பல ஐடி நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க உத்தரவு பிறப்பித்துள்ளன. தண்ணீர் இல்லாமல் பல விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

நகரங்களில் பல இடங்களில் பொது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறுகிறது. நகரின் பல பகுதிகளிலும் மக்கள் தண்ணீர் தேவைக்காக லாரிகளையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒரு லாரி தண்ணீருக்காக சென்னை நகர்ப்பகுதியில் உள்ள மக்கள், குறைந்தபட்சமாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரையில் காத்திருக்க வேண்டும்.

9ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிறைந்த ஒரு தண்ணீர் லாரிக்கு 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் சென்னை மெட்ரோ தண்ணீர் நிர்வாகம் வசூலிக்கிறது. இதே அளவு தண்ணீர் தனியார் லாரி நிறுவனங்களிடமிருந்து 4ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment