ரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்: டைரக்டர் ஷங்கரின் ஆஹா திட்டம்!

நடிகர்களை தேர்வு செய்வதில், காஸ்ட்லி டைரக்டர் ஷங்கரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை! தனது ஒவ்வொரு படத்திற்கும் தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத,...

நடிகர்களை தேர்வு செய்வதில், காஸ்ட்லி டைரக்டர் ஷங்கரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!

தனது ஒவ்வொரு படத்திற்கும் தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத, வெளிமாநில வில்லன்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுவார். ’அந்நியன்’ படத்தில் சவுரப் சுக்லா, ’எந்திரன்’ படத்தில் டேனி டென்சோங்பா, ’ஐ’ -ல் சுரேஷ் கோபி, உபேன் படேல், இப்போது, ’2.ஓ’ படத்தில் இந்தி ஹீரோ அக்‌ஷய்குமார் என நிறைய சொல்லலாம். அந்த வரிசையில், இன்னொரு இந்தி ஹீரோவை தமிழுக்கு இறக்குமதி செய்ய இருக்கிறார் ஷங்கர். அவர் அஜய் தேவ்கன்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடித்துள்ள ‘2.0’ படம், நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை உருவாக்கும் பணிகளில் பிசியாகிவிட்டார் ஷங்கர் . ஷூட்டிங் இந்த வருட இறுதியில் தொடங்குகிறது. இப்போதும் வேகம் பிடித்து வருகிறது படத்தின் டிஸ்கஷன்.

ஹீரோயின்கள் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகாத நிலையில் இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப் பட்டது. இவர், தமிழில் ’மின்சாரக் கனவு’, ’வேலையில்லா பட்டதாரி 2’ படங்களில் நடித்துள்ள முன்னாள் ஹீரோயின் கஜோலின் கணவர்!


இதுபற்றிய தகவல்கள் கசிந்தபோதும் உறுதிச் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். ’இயக்கு னர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்’ என்று கூறியுள்ளார் கமல்.  படத்தின் கதைப்படி, கமல்ஹாசன் ஆக்‌ஷன் காட்சிகளில் இறங்க மாட்டாராம். அவர் மூளையாக மட்டுமே செயல்படுவாராம். அவர் நினைக்கும் வேலை களை ஆக்‌ஷனின் இறங்கி அதகளம் பண்ணுவது அஜய்தேவ்கன்தான் என்று சொல்கிறார்கள்.

நெசமாவா பாஸூ ?

மேலும் பல...

0 comments