சி.எம்னு தான் கூப்பிடணும்! தனுஷ் கட்டளை! தலைசுற்றும் நட்புகள்!

‘பாரப்பா பகவலனும் பத்தில் நின்று…’ என்று அடிக்கடி ஒரு பாட்டு பாடுவார் டி.ராஜேந்தர். புலிப்பாணி சித்தர் எழுதிய பாட்டுதான் அது. ஜோதிட சாஸ்திர...

‘பாரப்பா பகவலனும் பத்தில் நின்று…’ என்று அடிக்கடி ஒரு பாட்டு பாடுவார் டி.ராஜேந்தர். புலிப்பாணி சித்தர் எழுதிய பாட்டுதான் அது. ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த புலிப்பாணி பாட்டு, பலரையும் வேலை வெட்டி இல்லாத ஆசாமியாக்கி, வெறும் கனவு காண வைத்துக் கொண்டிருக்கிறது. டி.ராஜேந்தரே கூட “வருங்காலத்துல நான் சி.எம். ஆயிடுவேன்னு என் ஜாதகம் சொல்லுது” என்று பிதற்றி வந்த காலமெல்லாம் ஒன்று உண்டு.

இப்படியெல்லாம் பிதற்றாமலே சி.எம். ஆன மிஸ்டர் எடிப்பாடி பழனிச்சாமியை பற்றி ஓல்டு தாத்தா புலிப்பாணிக்கு தெரியுமா, தெரியாதா? நமக்கு புரியவில்லை.

புலிப்பாணியின் பாடல் கேட்டு பேசுகிறாரா, இல்லை ‘திண்ணை காலியானா சிங்கிளாவே புடுச்சுடலாம்’ என்று கனவு காண்கிறாரா தெரியாது. தனுஷுக்கும் சி.எம்.ஆசை வந்திருப்பதுதான் திரையுலகத்தில் நிலவும் பேரதிர்ச்சி.

“நாற்பத்திரெண்டு வயசுல நான் சி.எம். ஆயிடுவேன்னு என் ஜாதகத்துல இருக்கு” என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி கூறிவருகிறாராம். கனவு அதோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. ‘வடசென்னை’ படப்பிடிப்பில் பணியாற்றும் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு போடப்பட்டிருக்கும் உத்தரவுதான் அதிர்ச்சி. “இங்கு என்னை யாரும் தனுஷ் சார்னு கூப்பிடக் கூடாது. வேணும்னா சி.எம். சார்னு கூப்பிடுக்கங்க” என்று கூறியிருக்கிறாராம். ஷாட் பிரேக்கில் கேரவேனில் இருக்கும் அவரிடம், மீண்டும் ஷாட்டுக்கு அழைக்கும் உதவி இயக்குனர்கள் “சி.எம்.சார்… ஷாட் ரெடி” என்றே அழைப்பதாக தகவல்.

தற்போது 39 வயதாகும் தனுஷுக்கு அவர் கணக்குப்படியே பார்த்தாலும் இன்னும் மூன்று வருடத்தில் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வந்துவிடும். இந்த தேர்தலிலேயே அவர் முதலமைச்சர் கேண்டிடேட் என்றால், ரஜினி கமலுக்கெல்லாம் என்ன பதவி கொடுக்கறது?

அதை நினைத்தால்தான் தலை சுற்றுகிறது!

ஆமாம்… கோழி, சோழி உருட்டி என்னாகப்போவுது? முதல்ல அது தெரிஞ்சாகணுமே!

மேலும் பல...

0 comments

Blog Archive