Tuesday, 14 August 2018

கடைக்குட்டி சிங்கமாக தமிழுக்கு வரும் மகேஷ்பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட்) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’. தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி இப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. இப்படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா இப்படம் குறித்து கூறும்போது, ‘இப்படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகரத்தெறிந்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர்.

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக ’நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது’ என்றார்.

No comments:

Post a Comment