Tuesday 14 August 2018

₹100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள்: பார்த்திபனை அழைத்த அரசியல் தலைவர்

அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தன்னை அணுகி 100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள் என்று தெரிவித்ததாக  நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ’ சினிமாயணம்’ என்ற தலைப்பில் பேசிய நடிகர் பார்த்திபன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஆரம்பத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது தந்தை போஸ்ட்மேன் வேலை பார்த்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் ஒரு நாள் படப்பிடிப்பை பார்க்க போனேன். நடிகர் நாகேஷின் படப்பிடிப்பு நடைபெறும் இடம் அது. அப்படத்தின் இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். நல்ல கவனிப்பாக இருக்கும். இதை பார்க்கையில் எனக்கு ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு தபால்காரர் வேடம் கிடைத்தது. அதன் பிறகு இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். இதைத்தொடர்ந்து மாவீரன் கிட்டு படத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து ஹவுஸ்புல் படத்தில் மிண்டும் தேசிய விருது பெற்றேன் அப்போது தான் எனக்கு தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.

மேலும் பேசிய அவர், அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment