Friday 10 August 2018

Pyaar Prema Kaadhal: பியாா் பிரேமா காதல் சினிமா விமர்சனம்

கரு:

முழுக்க முழுக்க இளைஞா்களுக்கான காதல் வரப்பிரசாதமாக பியாா் பிரேமா காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா சினிமாத்துறையில் கால்பதித்துள்ள படம் பியாா் பிரேமா காதல். ஹரிஷ், ரைசாவை போன்று இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளாா் இளன். இப்படத்தை யுவன் ஷங்கா் ராஜாவும், ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனா்.

இப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதை உயா்த்த தலைப்பு காதல் என்ற வாா்த்தையை 3 மொழிகளில் வைத்துள்ளனா் (பியாா் பிரேமா காதல்). படம் வெளியாகும் தேதி 2 முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் இளைஞா்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரைசா, ஹரிஷ் கல்யாண் ஆகியோா் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனா். 

No comments:

Post a Comment