Tuesday 23 July 2019

சரியாக இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் சமர்பித்த "மர்மம்"வெளியானது.!

கடந்த 2018 மார்ச் 14 ஆம் தேதியன்று, இனி இந்த உலகத்திற்கான "எச்சரிக்கை மணி" ஒலிக்காது என்று வருத்தப்படும் அளவிற்கு ஒரு மரணம் நிகழ்ந்தது. அது, அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்-ன் (Stephen William Hawking) மரணமாகும்.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் சமர்பித்த மர்மம்.!

கேட்டதும் சிரிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும், ஆனால் ஆழமான அர்த்தங்களை கொண்ட, விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் வெறும் வாய் மொழியாய் மட்டுமில்லாது, கோட்பாடுகளாய் முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவரே ஆவார்.!

தாயின் மறுமணத்திற்கு மகன் பதிவிட்ட பதிவிற்கு நெட்டிசன்ஸ்கள் பாராட்டு! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை எதை பற்றியது.?

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தார், கண்டிப்பாக நிகழ்த்தி இருப்பார் என்பது வெளிப்படை என்கிற பட்சத்தில், அவர் கடைசியாக எந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தார் என்பது சார்ந்த விவரங்கள் மர்மமாகவே இருந்தன. அந்த மர்மம் தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆம், ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை என்ன.? அது எதை பற்றிய விளக்கங்களை கொண்டுள்ளது என்பது சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர்.!

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது.

இணை பிரபஞ்சமா.? அப்படி என்றால் என்ன.?

நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரிய குடும்பம், அந்த சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம் (மில்கி வே கேலக்ஸி), அந்த பால்வெளி மண்டலத்தை சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாமும் சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும். அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை, தன்னை போன்றே உள்ள பல நூற்றுக்கணக்கான பிரபஞ்சங்களை கொண்டுள்ளது என்று நம்புமொரு கோட்பாடு தான் - பேரலல் யுனிவர்ஸ் அல்லது மல்டிவெர்ஸ் (Multiverse).!

இந்த இடத்தில் ஒரு அடிப்படையான கேள்வி எழும்.!?

இணை பிரபஞ்சங்கள் என்பது உண்மை என்றால், அங்கு நம்மை போன்றே உயிர்கள் வாழுமா.? என்கிற ஒரு அடிப்படையான கேள்வி இங்கு எழுகிறது அல்லவா.? அங்கு உயிர்கள் நிச்சயமாக இருக்கலாம் அல்லது சுத்தமாக இல்லாமல் கூட போகலாம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பிக் பேங்க் (Big Bang) வெடிப்பில் சிதறிய அத்துணை பிரபஞ்சங்களிலும் அணு உற்பத்தி ஆகியிருக்கும் என்று கூற முடியாது.

அது நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.?

அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை, மூலக்கூறுகள் இல்லை என்றால் நட்சத்திரங்கள் உருவாகி இருக்காது. நட்சத்திரங்கள் உருவாகவில்லை என்றால் நிச்சயமான கிரகங்கள் உருவாகி இருக்காது. கிரகங்கள் இல்லை என்றால் நிச்சயமாக உயிர்கள் இல்லை என்று தானே அர்த்தம். சரி ஒருவேளை, அணுக்கள் உருவாகி இருந்தால், அதன் வழியாக கிரங்கங்கள் உருவாகி இருந்தால், உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே என்று கேட்டால் - ஆம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த உயிரினம் நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சியதொரு உச்சத்தை அடைந்து இருக்குமா.? என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.!

இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கினார். அவருக்கு துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார். இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.

நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.?

ஹார்டில் - ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்கியது. அந்த புதிய விளக்கத்தை பகுப்பாய்வு செய்தபோது, ​​பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை, முடிவில்லாத எண்ணிக்கையின் கீழ் பல பிரபஞ்சங்களை உருவாக்கி இருக்கும் என்கிற ஒரு உறுதிப்பாடு கிடைத்தது.

தனது கடைசி நாளை கடந்து விட்டார்.!

இந்த கோட்பாட்டின் படி, நமது சொந்த பிரபஞ்சத்தைப் போலவே மற்றொரு பிரபஞ்சம் இருக்கும் என்று சிலர் நம்ப, மறுகையில் உள்ள சிலர், மற்ற பிரபஞ்சங்கள் நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். இணை பிரபஞ்சங்கள் மீதான நம்பிக்கையை விதைத்த ஹாக்கிங், அது நம்மை போன்றே இருக்குமா.? அல்லது விசித்திரமாக இருக்குமா.? என்கிற இரண்டு நம்பிக்கையில் எது உண்மை என்பதை கண்டறியாமலேயே தனது கடைசி நாளை கடந்து விட்டார் என்பது அறிவியல் ஆர்வலர்களுக்கான வேதனை.

No comments:

Post a Comment