Sunday 30 December 2018

ரஜினிக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டாரா என்று அவரின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்சி துவங்குகிறேன், தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பை கேட்டு அவரின் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அறிவிப்பு

நான் அரசியலுக்கு வருகிறேன், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம் கண்ணா என்று ரஜினி அறிவித்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் அந்த அரசியல் கட்சியை துவங்கவில்லை. கட்சி துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது என்று கூறி கொண்டாடுவது உண்டு. ஆனால் அறிவிப்பு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை பெரிதாக பேசுவது எல்லாம் ரஜினிக்கு மட்டும் தான் நடக்கும் போன்று.

அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து ஓராண்டு ஆகியும் கட்சி துவங்காமல் உள்ளார் ரஜினி. இந்நிலையில் டிவி சேனல் ஆரம்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ரஜினிக்கு கட்சி துவங்குவதில் ஆர்வம் இல்லை என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பிறகே அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பேட்ட

ஒரு வேளை பேட்ட வெற்றி விழாவில் கட்சி துவங்குவது பற்றி ரஜினி அறிவிக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். பேட்ட படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பை விட தற்போது தான் முழுவீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.

வர மாட்டார்

ரஜினி அரசியலுக்கு வருவார், ஆனால் வர மாட்டார் என்று கிண்டல் செய்கிறார்கள். கண்ணா, எப்ப வரணும், எப்படி வரணும் என்பது அவருக்கு தெரியும். வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவார் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். வந்தால் சரி பாஸ்.

No comments:

Post a Comment