Wednesday 2 January 2019

amazon, flipkart-ஐ ஒழிப்பேன், முட்டாளுங்க, நம்பிட்டாய்ங்க, அடுத்த 5 வருஷம் நாம தான்” மோடிஜி கணக்கு

இந்திய வணிகத்தை செல்லரித்துக் கொண்டு இருக்கும் amazon, flipkart போன்ற இ காமர்ஸ் நிறுவனங்களிடம் இருந்து மீட்டு நம் இந்திய சில்லறை வணிகர்களுக்கே திரும்ப கொடுக்க புதிய இகாமர்ஸ் கொள்கைகள் வரும் பிப்ரவரி 01, 2019-ல் இருந்து அமல்படுத்தப்படுகிறது.

இந்திய சில்லறை வணிகம்

47,04,000 கோடி ரூபாய். 2018-ல் இந்திய ரீடெயில் சந்தையின் வழியாக பொருட்களை விற்ற மதிப்பு என இந்திய வணிகர் சங்க அமைப்புகளில் ஒன்றான Assocham சொல்கிறது. அடுத்த வருடம், 2020-ல் இந்த தொகை 77,00,000 கோடி ரூபாயாக அதிகரிக்குமாம். அந்த அளவுக்கு இந்திய ரீடெயிலில் வளர்ச்சி வாய்ப்பிருக்கிறதாம்.

இ-காமர்ஸ்

Bain & Company என்கிற அமைப்பு, உலக அளவில் இ-காமர்ஸின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என கணித்திருக்கிறது. அதில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. 2013-ல் இருந்து 2018 வரையான ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு ஆண்டு 53% வளர்ச்சி கண்டு வருகிறதாம். உதாரணத்துக்கு 2017-ம் ஆண்டு இந்தியாவில் 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்ற இ காமர்ஸ் நிறுவனங்கள், 2018-ல் 2.2 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறதாம்.

மொத்த சந்தையில் இ-காமர்ஸ்

இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி கண்டு வந்தாலும், மொத்த சந்தையில் 5%-க்கும் குறைவாகவே கைப்பற்ரி இருப்பதையும் பல்வேறு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. 2018-ல் இந்தியாவின் மொத்த ரீட்டெயில் சந்தையான 47 லட்சம் கோடி ரூபாயில், இ காமர்ஸ் நிறுவனங்களால் 2.2 லட்சம் கோடி ரூபாய்க்குத் தான் பொருட்களை விற்க முடிந்திருக்கிறதாம். இது தான் இந்தியாவில் இ-காமர்ஸின் நிலை.

பிரச்னை

இந்த இடத்தில் தான் பிரச்னை வருகிறது. 2017-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2018-ல் 56% வளர்ச்சி. இப்படியே போனால், ஒரு கட்டத்தில் மொத்த சந்தையையும் இ காமர்ஸ் நிறுவனங்கள் பிடித்துவிடாதா என்ன..? பிடித்து விடாது, நம் சிறு வணிகர்கள் காக்கப்படுவார்கள் என்று சொல்பவர்கள், வெறும் இரண்டே வருடத்தில் ஜியோ இந்தியாவின் 20% டெலிகாம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்த கதையை படிக்கவும். டெலிகாம் நிறுவனத்தின் அசைக்க முடியாத தாதாவாக இருந்த ஏர்டெல்லே நஷ்டத்தில் ஓடும் அவலத்தையும் படிக்கவும்.

ஏன் இப்போது

இப்போது பல காலமாக வணிகர்கள், ஆன்லைன் விற்பனையாளர்களையும், இ காமர்ஸ் நிறுவனங்களையும் எதிர்த்து வந்ததை இப்போது மத்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கிறது. வழக்கம் போல தேர்தல் தந்திரங்கள் தானே. இந்தியாவில் சுமாராக 2.50 கோடி சிறு வணிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை நேரடியாக நம்பி சுமார் 12.5 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் (ஓட்டு) இருக்கிறது. அந்த ஓட்டுக்களை உறுதிப்படுத்த தான் இந்த கம்பீர நடவடிக்கை. அந்த கம்பீர நவடிக்கைகள் என்ன..?

புதிய சட்டங்கள்

மத்திய வணிக (Ministry of Commerce and Industry) அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை வகுக்கும் துறை (Department of Industrial Policy and Promotion) இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் வரும் பிப்ரவரி 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. அதில் மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் பார்ப்போம்

மாற்றம் 1

அமேஸான், ஃப்ளீப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் தாய் நிறுவனத்தின் (Parent company) பொருட்களையோ, அதன் (Group company) குழும நிறுவனத்தின் பொருட்களையோ அமேஸான், ஃப்ளீப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனத்தின் வழியாக விற்கத் தடை.
இதற்குமா..?
இதற்குமா..?

அதே போல் இந்த அமேஸான், ஃப்ளீப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவன (Company) பொருட்களையோ, தாய் நிறுவன பொருட்களையோ (Parent company), குழும நிறுவன பொருட்களையோ (Group company) அவர்களின் வலைதளத்தில் விற்கத் தடை.

எடுத்துக் காட்டு 1

ஃப்ளிப்கார்ட். சமீபத்தில் தான் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியது வால்மார்ட். இப்போது வால்மார்ட் நிறுவன பொருட்களையோ, வால்மார்ட்டின் துணை நிறுவனங்களின் பொருட்களையோ இனி ஃப்ளிப்கார்ட்டில் விற்க முடியாது.

எடுத்துக்கட்டு 2

ஃப்ளிப்கார்ட். 2014-ல் மிந்த்ரா நிறுவனத்தை கையகப்படுத்தியது ஃப்ளிப்கார்ட். ஆக மிந்த்ரா நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து தான் மிந்த்ராவை கையகப்படுத்தியது. எனவே இனி மிந்த்ராவின் பொருட்களையோ, மிந்த்ரா குழும நிறுவனங்களின் பொருட்களையோ ஃப்ளிப்கார்ட்டில் விற்கக் கூடாது.
பாதிப்புகள்
பாதிப்புகள்

Cloudtail, Appario, போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து Joint Venture நிறுவனமாகத் தான் நடத்தி வருகிறது அமேஸான் நிறுவனம். இப்போது இந்த நிறுவன பொருட்களை விற்க முடியாது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட் தன் சில்லறை வணீக சாம்ராஜ்யத்தை ஃப்ளிப்கார்ட் மூலம் வளர்க்க முடியாது.

மாற்றம் 2

ஒரு நிறுவனத்தின் பொருட்களை தன்னிடம் மட்டுமே விற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. அதாவது இனி எக்ஸ்குளூசிவ் விற்பனைகளை செய்யக் கூடாது. எல்லா பொருளும் எல்லா இ காமர்ஸ் நிறுவனத்திலும் கிடைக்க வேண்டும்.

எடுத்துக் காட்டு

அமேஸானில் விற்கப்படும் போன்கள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது ஸ்நாப்டீலிலோ கிடைக்காது. அதே போல் தான் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் போன்கள் அமேஸானிலோ அல்லது ஸ்நாப்டீலிலோ கிடைக்காது. இப்படி ஒரு மாடல் போனை ஒரே வலைதளத்தில் ஹைப் ஏற்றி இனி விற்கக் கூடாது. ஆக இனி எல்லா செல்போன்களும், எல்லா எல்லாம் இ காமர்ஸ் நிறுவனங்களிலும் கிடைக்கும். கிடைக்க வேண்டும். அப்படித் தான் சட்டம் சொல்கிறது.

பாதிப்பு

இனி அமேஸான் எக்ஸ்குளூசிவ், ஃப்ளிப்கார்ட் எக்ஸ்குளூசிவ் என தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒரே இ காமர்ஸ் நிறுவனத்தின் பொருட்களை விற்க முடியாது. இது அமேஸான், ஃப்ளிப்கார்ட் என இருவருக்குமே பெரிய நஷ்டம் தான். சியாமியும், ஒன்ப்ளஸ் நிறுவனமும் விரைவில் இந்திய சந்தையை பிடித்தது என்றால் அமேஸான் & ஃப்ளிப்கார்ட்டில் அவர்கள் போட்ட எக்ஸ்குளூசிவ் சேல்களும் ஒரு காரணம்

மாற்றம் 3

ஒரு நிறுவனத்துக்கு சார்பாக கேஷ் பேக், உடனடி டெலிவரி, இலவச டெலிவரி, அதிரடி விலை குறைப்பு போன்றவைகளை இனி செய்யக் கூடாது. கேஷ் பேக் என்றால் எல்லா நிறுவனத்துக்கும் கேஷ் பேக் கொடுக்க வேண்டும். இலவச டெலிவரி என்றால் எல்லா பொருளுக்கும் இலவச டெலிவரி வேண்டும்.
எடுத்துக் காட்டு
எடுத்துக் காட்டு

நான் சோனி பிராண்டின் ஹெட் போன்களை 2000 ரூபாய் கொடுத்து ஆர்டர் செய்கிறேன். இதற்கு எந்த ஒரு விலை குறைப்போ, இலவச டெலிவரியோ இல்லை. ஆனால் ஜேபிஎல் நிறுவன ஹெட்போன்களுக்கு 20% விலை தள்ளுபடியோடு இலவச டெலிவரி என்றால் நான் ஜேபிஎல் நிறுவன ஹெட் போன்களை வாங்க தூண்டப் படுகிறேன். இது சோனி நிறுவனத்துக்கு நஷ்டம் தானே. எனவெ தான் இந்த சம நிலையற்ற தன்மையை சட்டமாக கொண்டு வந்து சரி செய்கிறார்கள்.

பாதிப்பு

இனி கேஷ் பேக், இலவச டெலிவரி, தள்ளுபடி போன்ற மாயாஜாலங்கள் படிப்படியாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே சந்தையில் கிடைக்கும் விலைக்கே கூட இனி ஆன்லைனிலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. என்ன நாம் வெளியே அலையாமல் வீட்டுக்கே வந்து டெலிவரி கொடுப்பார்கள் அவ்வளவு தான் வித்தியாசம். சியாமி இதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆன்லைனில் சியாமி நிறுவன போன்களுக்கு என்ன விலையோ, அதே விலைக்கு சியாமி ஷோரூம்களில் கிடைக்கும்.

மாற்றம் 4

எந்த ஒரு நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 25%-க்கு மேல் ஒரே இ காமர்ஸ் நிறுவனத்திடம் விற்கக் கூடாது. அப்படி விற்றால் அந்த நிறுவனத்தை இ காமர்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துவதாகவே கருதப்படும்.

எடுத்துக்காட்டு

மேலே சொன்ன ஒப்போ செல்போன் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். ஒப்போ F9 மாடல் போன்கள் 100 தயாரித்திருக்கிறார்கள் என்றால், இனி அமேஸானில் 25 போன்களுக்கு மேல் விற்கக் கூடாது. அதே போல் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் 25 போன்களுக்கு மேல் விற்கக் கூடாது.

மாற்றம் 5

இ காமர்ஸ் நிறுவனங்கள் பொருளை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஒரு பாலமாக மட்டுமே செயல்பட வேண்டுமே ஒழிய, பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் தலை இடக்கூடாது.

எடுத்துக் காட்டு

அமேஸான் நிறுவனம் டப்பர் வேர் என்கிற ப்ளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பொருட்களை விற்கிறது என்றால், டப்பர்வேர் தான் தன் பொருட்களுக்காக விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இப்போது வரை இ காமர்ஸ் நிறுவனங்கள் தான் டப்பர்வேரின் விலையை நிர்ணயிப்பார்கள்.

எப்படி

டப்பர்வேர் நிறுவனத்தின் ஒரு பாட்டிலின் உற்பத்தி விலை 10 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதை உற்பத்தி விலை + லாபம் சேர்த்து 12 ரூபாய்க்கு அமேஸானிடம் விற்பார்கள். இப்போது டப்பர்வேரிடம் இருந்து 1000 பாட்டில்களை அமேஸான் வாங்கும் என்றால் டப்பர் வேர் தன் லாபத்தை கொஞ்சம் குறைத்தும் கொண்டு உற்பத்தி விலை 1000 * 10 = 10,000 + லாபம் 1000* 1 = 1000 என 11,000 ரூபாய்க்கு தருவான்.

பாதிப்பு

இத்தனை பெரிய எண்ணிக்கையில் அமேஸானைத் தவிர வேறு யாரும் பாட்டில்களை வெளியே வாங்க முடியாதவர்களுக்கு 11 ரூபாய்க்கு பாட்டில்களை விற்காது டப்பர்வேர். ஆக மற்ற வணிகர்களுக்கு அடக்க விலை 12 ரூபாய் என்றால் அமேஸானுக்கு அடக்கவிலை 11 ரூபாய் தான். இப்போது வணிகர்களின் லாபம் சேர்த்து 15 ரூபாய்க்கு விற்றால், அமேஸான் அசால்டாக 14 ரூபாய்க்கு விற்பான். ஆனால் வணிகர்கள் பார்க்கும் லாபத்தை அமேஸானும் பார்ப்பான். இந்த எடுத்துக்காட்டை செல்போன், ஆடைகள், மின் சாதனங்கள் தொடங்கி, சானிட்டரி நாப்கின் வரை பொருத்திப் பார்க்கலாம்.

நன்மை

இனி எந்த இ காமர்ஸ் நிறுவனமும் மொத்தமாக வாங்கி வைத்து விலையை நிற்ணயிக்க முடியாது. மேலே சொன்னது போல விற்பவருக்கும், வாங்குபவருக்கும் நடுவே ஒரு தரகர் போல செயல்படலாம். அவ்வளவு தான். எனவே இனி சிறு குறு வணிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக தங்கள் வியாபாரத்தைப் பார்க்கலாம்.

கொந்தளித்த அதிகாரிகள்

அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளை ஒரு முறை கூட கலந்து ஆலோசிக்காமல், ஒரு வார்த்தை கூட கேட்கமால் இவ்வளவு பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கடுப்பாகி இருக்கிறார்கள். இ காமர்ஸ் நிறுவனத்தினர்கள். குறைந்த பட்சம் இதில் சாத்தியப்படுமா..? என கூட கேட்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறதாம்.

அமேஸான் அதிகாரி

இந்திய சில்லறை வணிகத்தைப் பற்றித் தெரியாதவர்கள், சரியான புரிதல் இல்லாதவர்கள் இந்த சட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய சட்ட திட்டம் தெளிவற்றது, முட்டாள் தனமானது என பெயர் குறிப்பிட விரும்பாத அமேஸான் உயர் அதிகாரி அனைத்து பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.

ஆச்சர்யம்

இப்படி அமேஸான் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது ஸ்நாப் டீல் மட்டும் இந்த மாற்றத்தை வரவேற்று இருக்கிறது. அந்த ட்விட்டை மேலே படத்தில் பார்க்கலாம்.

தலையில் துண்டு

ஃப்ளிப்கார்ட், ஸ்நாப் டீல் போன்ற இந்திய இ காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கு, சாஃப்ட் பேங்க், டைகர் குளோபல், போன்ற முதலீட்டு நிறுவனங்கள் இனி எப்படி தாங்கள் முதலீடு செய்த நிறுவனங்கள் தழைக்கும், போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்கிற ரீதியில் யோசித்து வருகிறார்களாம். ஏன் என்றால் இவர்கள் முதலீடுச் செய்திருப்பது எல்லாம் கோடிக் கணக்கில், 1000 கோடிகளில்.

கொண்டாடும் வணிகர் சமூகம்

அனைத்திந்திய வணிகர்கள் சம்மெளனம் அரசின் இந்த நடவடிக்கையை கொண்டாடிக் தீர்க்கிறது "அரசு மட்டும் நித விதிகளை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினால், இந்தியாவில் பொருட்களின் விலை நிலையாக இருக்கும், ஏகப்பட்ட வணிகர்களின் குடும்பங்களின் பிழைப்பும் உருதி செய்யப்படும்.

நமக்கு என்ன..?

அடுத்த சில மாதங்களுக்கு அதாவது ஃப்ளிப்கார்ட்டும், அமேஸானும் ஒரு புதிய வழி கண்டு பிடித்து தங்கள் வியாபாரத்தை செய்யும் வரை ஆன்லைனில் பெரிய விலை குறைவோ, தள்ளுபடிகளோ இனி இருக்காது. சொல்லப் போனால் இனி பிக் பில்லியன் டே, ஷாப்பிங் ஃபெஸ்டிவல் போன்ற விளம்பரங்களையும் பார்க்க முடியாது.

அரசுத் தரப்பு

வழக்கம் போல் எங்கள் மக்களின் வாழ்கை தான் முக்கியம். இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயட்துக்கு அடுத்த படியாக அதிக மக்கள் நம்பி வாழ்ந்து வரும் துறை இந்த சில்லறை வணிகம் தான். எனவே நாங்கள் வணிகர்களின் நலனுக்காகத் தான் இந்த நடவடிக்கை எடுத்தோம் என மீசையை முருக்குகிறது.

மோடி மைண்ட் வாய்ஸ்

பாஜக, காசு வர்றா இ காமர்ஸ அதுவும் அமேஸானையும், ஃப்ளிப்கார்ட்டையும் ஒழிக்கிறதா.. அத எதிர்த்துக் கூட பேச மாட்டோம்... முட்டாப் பயலுங்க என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பு... பணமதிப்பிழப்பப்ப தூக்குல தொங்குவேன்னு சொன்னேன், தொங்கிட்டேனா, புதிய இந்தியா பிறக்கும்னு சொன்னேன் பொறந்துருச்சா...? இவனுங்கள மாதிரி நாம சொல்றத கேட்குற, நம்புற மக்கள் இருக்குற வரைக்கும் அடுத்த 5 வருஷம் மட்டும் இல்ல, எல்லா 5 வருஷமும் கண்டிப்பா நாம தான். இது தானங்க உங்க மைண்ட் வாய்ஸ் மோடிஜி

No comments:

Post a Comment