Monday 24 June 2019

ஒரு ஏழை இளைஞனின் சுவராஸ்யமில்லா பயணம் இந்த பக்கிரி - திரைவிமர்சனம்

கரு :

 தன் தாய் இறந்தபின் தந்தையை தேடிப்போகும் ஒரு மகனின் அசாத்திய பயணம்.

கதை :

மும்பையில் தன் தாயுடன் ஏழ்மையில் வசிக்கும் தனுஷ், தனக்கு தெரியாத மேஜிக்கை தெரிந்ததாக காட்டிக்கொள்கிறார். தன் தாய் இறந்தவுடன் தன் தந்தையை பற்றி தெரிந்து அவரைத் தேடி ஃபிரான்ஸ்க்கு பயணமாகிறார். வாழ்வில் பணம் தான் முக்கியம் என கருதும் அவரை இந்த பயணம் எப்படி மாற்றுகிறது. என்ன கற்றுக் கொடுக்கிறது. என்பது தான் கதை. ஒரு ஏழை இந்தியனின் ஆச்சர்ய அசாத்திய பயணம் தான் இந்தப் படம்.

நடிப்பு :

 தனுஷ் மும்பையில் வாழும் ஏழை இளைஞனாக வருகிறார். தெரியாத மேஜிக்கை அவர் செய்யும் இடங்கள் அழகு. தமிழ்படங்களில் அவரிடம் இருக்கும் ஒரு துள்ளல் இந்தப்படத்தில் மிஸ்ஸிங்க். ஏதோ ஒன்று குறைவது போலவே உள்ளது. தனுஷுக்கு ஜோடியாக வருபவர் அத்தனை அழகு. தனுஷுடன் அவரது காட்சிகளில் தனுஷை மிஞ்சிவிடுகிறார. படத்தில் நிறைய கேரக்டர்கள் வருகிறது. இது ஒரு பயணத்தை மையப்படுத்திய படம் என்பதால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு கேரக்டர் ப்டத்திற்குள் வருவது ஒரு குழப்பம்.தனுஷின் பயணத்தில் நிறைய இடங்க்களில் சுவாரஸ்யம் குறைவு

தொழில்நுட்ப குழு :

 இது ஃபிரெஞ்ச் படம் என்பதால் முழுக்கவே ஹாலிவுட் குழு பணியாற்றியுள்ளது.படத்தை குழந்ததைகள் ரசிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்துள்ளார்கள். மேஜிக் காட்சிகள், தனுஷின் பயணங்கள் அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவில் மும்பை, பாரிஸ், லண்டன் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.எடிட்டிங்க், சிஜி படத்திற்கு பலம்.

இயக்கம் :

கென் ஸ்காட் சில ஹாலிவுட் படங்க்களுக்கு பிறகு ஒரு இந்திய தன்மை கொண்ட படத்தை இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கு பிடிக்கும் படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு இயக்கியுள்ளார்.தனுஷின் தமிழ் ஸ்டார் கவனம் படத்தில் இல்லை.

தனுஷை பயன்படுத்திய விதத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் படத்திற்கு பொருந்தவில்லை. தமிழில் இந்தப்படம் பெரிய வரவெற்பு கிடைக்காமல் போவதற்கான காரணங்கள் படத்தில் அதிகம் உள்ளது. தமிழுக்கு தேவைப்படும் பரபர திரைக்கதை எதுவும் இல்லை. படம் மிக மெதுவாக நகர்வது ரசிகர்களை எரிச்சல் படுத்துகிறது.

பலம் :

 குழந்தைகளுக்கு பிடிக்கும் மேஜிக் காட்சிகள்

பலவீனம் :

தொய்வான, ஈர்ப்பில்லாத திரைக்கதை

ஃபைனல் பஞ்ச் :

ஒரு ஏழை இளைஞனின் சுவராஸ்யமில்லா பயணம் இந்த பக்கிரி.

No comments:

Post a Comment