Sunday 30 June 2019

சுகாதார துறை கூட்டத்தில் இனி பிஸ்கட் இல்லை.. முந்திரி,பாதாமா சாப்பிட்டு வேலை பாருங்க..சுகாதார துறை!

மத்திய சுகாதாரத் துறையின் கூட்டங்களில் பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக முந்திரி பாதாம், பிஸ்தா, பேரீட்சை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் சுகாதார துறையின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில், உறுப்பினர்களுக்கு மக்களை கேண்டீனிலிருந்து டீ காபி, பிஸ்கட் என வழங்கப்பட்டு வருகிறது.

சுகாதார துறை கூட்டத்தில் இனி பிஸ்கட் இல்லை.. முந்திரி,பாதாமா சாப்பிட்டு வேலை பாருங்க..சுகாதார துறை!

இந்த நிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தீனிகளுக்கு பதிலாக, புதிய மெனுவில் வறுத்த முந்திரி பக்கோடா, பிஸ்தா, பாஸ்தா, வால்நட், கொண்டைக்கடலை போன்ற உடலுக்கு வழங்குவது ஆரோக்கியத்தை கொடுக்கும், ஆக இதுபோன்ற ஸ்நாக்ஸ்கள் தான் இனி வழங்கப்பட வேண்டும் என ஹர்ஷ் வர்த்தன் கூறியுள்ளாராம்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர், விற்கிற விலைவாசிக்கு முந்திரி பிஸ்தா அவசியம்தானா, என்றும் போகிற போக்கை பார்த்தால் இதற்காக தனியாக பட்ஜெட் ஒதுக்க வேண்டும் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். '

அதோடு அமைச்சரவையில் இந்த திட்டம் சல சலப்பை உருவாக்கியுள்ளது. சில தனிப்பட்டவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார். சிலர் இதை நல்ல விஷயம் என்று கூறினாலும், உணவுப் பழக்க வழக்கம் என்பது சிலரின் தனிப்பட்ட விஷயம் என்றும் கூறுகின்றனர்.

இதை பள்ளிகளிலும் செயல்படுத்த முயல்வதாகவும் கருதப்படுகிறது. தற்போது ஜி.20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து, இது பற்றிய தெளிவாக அறிக்கையை வெளியிட உள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்களில் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment