Friday 28 June 2019

நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. சேரனையே டென்ஷனாக்கிய மீரா!

பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக பங்கேற்றுள்ள மீரா நீதி நேர்மை நியாயம் என்றெல்லாம் பேசி இதுவரை பொறுமையாக இருந்த சேரனையே டென்ஷனாக்கி விட்டார் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக வீட்டிற்குள் வந்தவர் மீரா மிதுன். அவர் மீது ஏராளமான மோசடி புகார்கள் குவிந்துள்ளன.

அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது புகாகள்ர உள்ளன. இதன் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மீராவுக்கு வழங்கிய மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்ப பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு.

வேறு மாதிரி ட்ரீட்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, அவரின் ஏமாற்றுதனத்தை ஹவுஸ் மேட்ஸிடம் கூறினர் சாக்ஷியும் அபிராமியும். முதல் நாளே மீராவை அவர்கள் ட்ரீட் செய்த விதம் வேறு மாதிரி இருந்தது.

பாத்திரம் கழுவுவதில் பிரச்சனை

இதைத்தொடர்ந்து நாள்தோறும் ஒரு பிரச்சனையை கிளப்பி வருகிறார் மீரா. நேற்றைய எபிசோடில் பாத்திரம் கழுவுவது தொடர்பான பிரச்சனையை கிளப்பி மொத்த பிக்பாஸ் வீட்டையும் கதிகலக்கி விட்டார்.

சேரனிடம் ஆர்க்யூ செய்யும் மீரா

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய இயக்குநர் சேரன் மதுமிதா, சாண்டி மற்றும் மீராவை அழைத்து பேசுகிறார். அப்போது வார்த்தைக்கு வார்த்தை சேரனிடம் ஆர்க்யூ செய்கிறார் மீரா.

என் இஷ்டம்.. நான் நனைந்தேன்

எனக்கு ஜலதோஷம் அதனால்தான் பாத்திரம் கழுவவில்லை என்று சேரனிடம் கூறுகிறார் மீரா. அப்படி இருக்கும் நீ, ஏன் மழையில் நனைந்தாய் என கேட்கிறார் சேரன். அதற்கு அது என் இஷ்டம் எனக்கு பிடித்தது நான் நனைந்தேன் என்கிறார்.

நீதி, நேர்மை, நியாயம்

மேலும் யாரிடமும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனக்கு தெரிந்ததெல்லாம் நீதி, நேர்மை, நியாயம் என சேரனிடமே சட்டம் பேசுகிறார். எல்லோரிடமும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என மதுமிதா பேசுவதையும் மீரா காதில் வாங்கவில்லை.

டென்ஷனான சேரன்

மற்றவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்காமல் தான் பேசியதையே பேசுகிறார் மீரா. இதனை கொஞ்சமும் விரும்பாத சேரன், என்னிடம் பதிலுக்கு பதில் பேசாதே, ஆர்க்யூ பண்ணாதே, நான் இரவில் பாத்திரம் கழுவுகிறேன் என்று கூறிவிட்டார்.

இந்த காட்சியே சாட்சி

இரவில் தான் அதிகம் பாத்திரம் உள்ளது என்பதுதான் தற்போதைய பஞ்சாயத்து. இந்நிலையில் இரவில் தானே பாத்திரம் கழுவுகிறேன் என அந்த நேரத்தை எடுத்துக்கொண்டார் சேரன். இயக்குநர் சேரன் ஒரு நல்ல படைப்பாளி, பெரிய மனிதர், மனிதாபிமானம் கொண்டவர், சீர்திருத்தத்தையும், அமைதியையும் விரும்புகிறார் என்பதற்கு இந்த ஒரு காட்சியே சாட்சி.

No comments:

Post a Comment