Sunday 19 August 2018

யாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி பாருங்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் தொடக்கம் முதல் பாதி ஆண்டு வரை படு மோசமாக தான் இருந்தது. ஆனால், ஜுலை மாதம் தொடங்கி தற்போது வரை பல படங்கள் ஹிட் அடித்துள்ளது.

இதில் யாரும் எதிர்ப்பாராத விதமாக இரும்புத்திரை, மகாநடி, டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்துள்ளது.

இரும்புத்திரை வெளிவந்து 100 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 62 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல் ஜெயம் ரவியில் டிக் டிக் டிக் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநடி) இந்த படமும் ரூ 83 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் அவர் திரைப்பயணத்தையே மாற்றியமைத்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment