Tuesday 25 June 2019

ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி! ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ!

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுமென்றும் ஆதார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

என்ன போட்டி? போட்டியில் என்ன செய்ய வேண்டும்?

   ஆன்லைன் ஆதார் சேவைகளுக்கான டுடொரியல் குறுந்தகவல் வீடியோவை நீங்கள் உருவாக்கி அதனைப் பதிவு ஆதரவுடன் செய்ய வேண்டும்.
    போட்டியில் பங்குபெறுவதற்காக 15 தனிப் பிரிவுகளை ஆதார் உருவாகியுள்ளது.
    இந்த 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைப் போட்டியாளர் தேர்வு செய்து வீடியோ உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர் யார்?

        இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த போட்டிக்கு தகுதியானர்கள் தான்.
        முக்கியமாக உங்களின் ஆதார் உங்களின் வங்கி அக்கௌன்ட் உடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
        அப்படி இணைக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்பு இணைத்துக்கொள்ளுங்கள்.

        போட்டியின் விதிமுறை என்ன?

            இந்த ஆதார் போட்டி ஜூன் 18 ஆம் முதல் துவங்கி ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறுகிறது.
            ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பு உங்களின் குறுந்தகவல் வீடியோக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
            நீங்கள் உருவாக்கும் டுடொரியல் வீடியோவில், ஆன்லைன் சேவைக்கான முழு விபரங்களும் 30 முதல் 120 வினாடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
            வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள தளம் மற்றும் அதன் லிங்க்.

         செயல்முறை

            போட்டியாளர்கள் ஒன்றிற்கும் அதிகமான வீடியோ பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.
            தனிப்பட்ட உள்ளீடுகளுக்கு மட்டுமே அனுமதி.
            போட்டிக்கான வீடியோ அசல் பதிவாக இருப்பது அவசியம். போட்டிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த எந்த பழைய பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
            உங்கள் ஆதார் எண், ஈமெயில் விலாசம், மொபைல் எண், வங்கி விபரம் போன்றவை அவசியம்.

            வீடியோக்களை எப்படிச் சமர்ப்பிப்பது?

                நீங்கள் உருவாக்கும் வீடியோ, அனிமேஷன் வீடியோ டுடொரியலாகவோ அல்லது பயிற்சி டுடொரியல் வீடியோவாகவோ இருக்கலாம்.
                15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைத் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்.
                வீடியோ டுடோரியலை யூடியூப் அல்லது கூகிள் டிரைவ் அல்லது வீ-டிரான்ஸ்ஃபர், டிராப்பாக்ஸ் போன்ற பிற கோப்பு பகிர்வு தளங்களில் பதிவேற்றிக்கொள்ளலாம்.

                வீடியோ வடிவங்கள் இருக்க வேண்டிய விபரங்கள்
                    பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவிற்கான தளம் மற்றும் லிங்க் குறிப்பிடுதல் அவசியம்.
                    வீடியோக்கள் MP4, MPEG, MPV, WMV, FLV அல்லது AVI வீடியோ வடிவங்களில் இருக்க வேண்டும்.
                    சிறந்த ஒலி தரத்துடன் கூடிய FHD 1080p அல்லது அதிக தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
                    வீடியோ இணைப்புடன் media.division@uidai.net.in என்ற தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

                பரிசுத் தொகை எவ்வளவு?

                    மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
                    அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
                    முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும்,
                    இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும்
                    மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
                    இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

                    பரிசுத் தொகை எவ்வளவு?

                        மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
                        அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
                        முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும்,
                        இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும்
                        மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
                        இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

           போட்டியில் வெற்றிபெற சீக்ரெட் டிப்ஸ்!

                            கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் டுடோரியல் வீடியோகளை உருவாக்கிச் சமர்ப்பியுங்கள். இது உங்களின் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
                            வீடியோ பதிவுகளைக் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தெளிவாய் விளக்கிவிடுங்கள்.
                            வீடியோக்களை ரெகார்டிங் செய்வதற்கு முன்பு செயல்முறைகளை முதலில் படிப் படியாகத் தொகுத்துக்கொள்ளுங்கள்.
                            அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்கப் போகிறீர்கள் என்றால் எழுத்துப் பிழைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
                            வீடியோ பதிவாக இருந்தால் நல்ல கேமரா மற்றும் ஆடியோ மைக்குகளை பயணப்படுத்துங்கள்.

                    வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்க இதை செய்யுங்கள்!

                            FHD 1080p அல்லது அதற்கும் மேலான FHD தரத்தில் வீடியோக்களை உருவாக்குங்கள். அதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
                            எடிட் செய்யும் பொழுது இடையில் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை இனைக்கத் தவறிவிடாதீர்கள்.
                            செயல்முறைகளை ஸ்கிரீன் ரெகார்டிங் செய்வது சுலபமான மற்றும் பிழை இல்லாத முறையாக இருக்கும் என்ற டிப்ஸை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

                                வீடியோ அப்லோட் செய்யும் பொழுது ஆன்லைன் சேவைக்கான அதிகாரப்பூர்வ லிங்க்குகளை இனைத்துக் கொள்ளுங்கள்.

                            இது போன்ற சிறிய நுணுக்கங்கள் உங்களின் வெற்றிக்கான வாய்ப்பை எளிதாக்கி, அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment