Wednesday 26 June 2019

ஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.!

உலகளவில் பில்கேட்ஸ் என்றால் அவர் செய்த சாதனைகள் தான் நமக்கு ஞாபகம் வரும். இருந்த போதிலும், அவரின் கடின உழைப்புக்கு முன் எதையும் தன் வசப்படுத்தி விடுவார்.

பில்கேட்ஸ் செய்த சாதனைகளில் இன்று வரை பலரையும் ஆழ்ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி பட்டவருக்கு வாழ்கையில் ஒரு தோல்வி ஏற்பட்டுள்ளது. அது எப்படி என்றால், ஆண்ட்ராய்டுடால் தான். இது அவரோ மிகப்பெரிய தோல்வி என்று கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பில்கேட்ஸ் வெற்றி பலருக்கு தெரியும்:

கடின உழைப்பால் பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளார் பில்கேட்ஸ். அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்று பார்த்தல் நமக்கே ஆச்சரியமாகவும் இருக்கும். இந்நிலையில் பலரின் வாழ்கையில் சுவாரசியம் நிறைந்ததாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் பில்கேட்ஸ் பலரது வாழ்கைக்கும் உந்துகோளாகவும் இருந்துள்ளார்.

ஆண்ட்ராய்டிடம் தோல்வி:

ஆண்ட்ராய்டிடம் தோற்றதே தான் செய்த மிகப்பெரிய தவறு என்று மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதும் மைக்ரோசாப்ட் வலிமையான நிறுவமான இருக்கிறது என்ற போதிலும், ஆன்ட்ராய்ட் தளத்தை பெற்று இருந்தால் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பதற்கு பதில், முன்னணி நிறுவனமாகவே இருந்திருக்கும் என்றார்.

ஆண்ட்ராய்டை கவனிக்கவில்லை:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனது நேரத்தை செலவிட்டதும், ஆண்ட்ராய்டை கவனிக்காமல் விட்டதும் தான் நிர்வாகத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டார். ஆண்ட்ராய்டை 2005 ஆம் ஆண்டு 347 கோடி ரூபாய்க்கு கூகுள் வாங்கிய நிலையில், தற்போது ஆண்ட்ராய்டை பெற வேண்டும் என்றால் சுமார் 27 லட்சத்து 76 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தேவைப்படும் என்று பில்கேட்ஸ் தெரிவித்தார்.

விண்டோஸ் போன் தயாரிப்பு முடக்கம்:

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் போன்களை தயாரித்துக் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்ட் தளத்துடன் போட்டியிட முடியாததால், 2017 ஆம் ஆண்டில் விண்டோஸ் போன் தயாரிப்பை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது.

நாசுக்கான கூகுள்:

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு தயாரிப்பை மேம்படுத்தியது. இதில் தனிக் கவனம் செலுத்தி மற்ற நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!

மேலும் வியாபார யுக்திகளையும் கூகுள் நிறுவனம் செம்மையாக செயல்படுத்தியது. இதையடுத்து கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு வளர்ச்சியில் கால் பதித்ததது.

No comments:

Post a Comment