Tuesday 23 July 2019

நா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி

தனது பெயர் கெட்டுப்போகாமல் இருக்க நடிகர் சிவகுமார் அக்கறையுடன் உதவியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. ரஜினி, ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இசையை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னை பொம்பள பொறுக்கி என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக சிவக்குமார் அக்கறையுடன் செயல்பட்டதாகக் கூறினார்.

சிவக்குமார் கால்ஷீட்:

இதுகுறித்து விழாவில் அவர் பேசியதாவது, "1960-களில் இருந்த பெரிய நடிகரின் கால்ஷீட்டுக்கு அவ்வளவு டிமாண்ட். அவர் கால்சீட் கொடுக்கலைன்னா, வேற யார்கிட்டேயும் போகமாட்டாங்க. காத்திருந்து கால்ஷீட் வாங்குவாங்க. அந்த நடிகர், தன் வீட்டுல ரெண்டு செடிகளை நல்ல நல்ல உரங்களைப் போட்டு வளர்த்தார். அந்த ரெண்டு செடிகளும் மரமான பிறகு, பணத்தை மட்டும் காய்க்கல... நல்ல பெயர், புகழ், செல்வாக்குனு எல்லாமே கொடுத்தது. அந்தச் செடிகள்தான் சூர்யாவும், கார்த்தியும்.

ஷூட்டிங் ஸ்பாட்:

சிவகுமார் சார்கூட 'கவிக்குயில்', 'புவனா ஒரு கேள்விக்குறி' ரெண்டு படங்கள் நடிச்சுட்டேன். 'கவிக்குயில்' பட ஸ்பாட்ல ஶ்ரீதேவி, ஃபடாஃபட் ஜெயலக்‌ஷ்மி ரெண்டுபேர்கிட்டேயும் பேசிக்கிட்டு இருப்பேன். 'எப்போ பார்த்தாலும் பொண்ணுங்ககிட்டயே பேசிக்கிட்டு இருக்க. ஏதாவது புத்தகத்தைப் படி, எழுது'னு சிவகுமார் என்னைத் திட்டுவார். 'நான் என்ன சார் பண்றது... அவங்கதான் பேசுறாங்க'னு சொன்னேன்.

பூக்கள் பெயர்:

அவங்க என்கிட்ட பேசுறாங்களாய்யானு கேட்டார். ஏன் அவர்கிட்ட பேசமாட்டிக்கிறீங்கனு நடிகைகள்கிட்ட கேட்டேன். சிவகுமார் சார் கோபப்படலைன்னா சொல்றேன். அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா, 100 பூவோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சிடுவார்னு சொன்னாங்க.

வசனம்:

அடுத்து, 'புவனா ஒரு கேள்விக்குறி' பட ஸ்பாட்ல ஒரு சம்பவம். ஒருநாள் எனக்கு சீன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சரினு நானும் சுமத்ராவும் பேசிக்கிட்டு இருந்தோம். கொஞ்சநேரத்துல ஒரு அசோஸியேட் டைரக்டர் வந்து கையில் ரெண்டு பக்க வசனம் கொடுத்து, 'இதை ரெடி பண்ணிக்கோங்க. சூரியன் மறையும்போது எடுக்கணும். ஒரே டேக்ல பண்றமாதிரி தயாராகிக்கோங்க'னு சொல்லிட்டுப் போயிட்டார்.

மனப்பாடம் பண்ணினேன்:

எல்லாமே திருக்குறள் மாதிரி இருக்கு. சரினு நானும் தனியா வந்து ஒரு மரத்தடியில் சேர் போட்டு உட்கார்ந்து, சாப்பிடாமகூட மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சாயுங்காலம் ஆகிடுச்சு, பேக்-அப் சொல்லிட்டாங்க. அந்த சீனை எடுக்கவே இல்லை.

நல்ல எண்ணம்:

அப்புறம் சிவக்குமார் சார் வந்து, படத்துல இந்த சீனே கிடையாது. நீ ரொம்ப நேரம் அவங்ககூட பேசிக்கிட்டு இருந்ததை வேற யாராவது பார்த்து உன்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்லிடக்கூடாதுல்ல. அதனாலதான், நான் இதைக் கொடுக்கச் சொன்னேன்'னு சொன்னார். சக நடிகன் கெட்டபெயர் வாங்கக் கூடாதுங்கிற அக்கறை அவருக்கு எப்போவும் இருக்கும்", என ரஜினி சொன்னதும் அரங்கமே ஆர்ப்பரித்தது

No comments:

Post a Comment