Saturday 11 August 2018

"திரையிடவிடாமல் என் படத்தை தடை செய்வது யார் என தெரியும்" - கமல்ஹாசன்

திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் - 2 படம் நேற்று வெளியானது. நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், கடைசி வரை இந்த படம் ரிலீசாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் படம் வெளியானாலும், சில திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சென்னையில் வணிக வளாகத்தில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன்,  பல மாவட்டங்களில் படத்தை திரையிட விடாமல் சிலர் தடை ஏற்படுத்துவதாகவும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றார்.

மேலும், திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். ஹேராம், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரம், உத்தமவில்லன், விஸ்வரூபம் என அனைத்து படங்களும் பல்வேறு தடைகளை தாண்டி தான் திரைக்கு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment