Saturday 11 August 2018

உடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா? இதை செய்யுங்க

நம் உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் 85% தண்ணீர், 10% பித்த உப்பு, 3% மியூக்கஸ் திரவம், 1% கொழுப்பு மற்றும் 0.7% கனிம உப்புகள் அடங்கியுள்ளது.

இத்தகைய கல்லீரலில் தான் பித்தநீர் சுரக்கப்படுகின்றன. பித்தநீர் பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக இருக்கும், சிறுகுடலின் உணவு செரிமானத்திற்கு இந்த நீர் தான் பெரிதும் உதவுகின்றது.

அத்தகைய பித்தநீரனாது நம் உடலில் அதிகப்படியாக சுரப்பதினால் கல்லீரல் பாதிக்கப்படுகின்றன, எனவெ பித்த நீர் அதிகமான இருந்தால் அதனை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

பித்த‌த்தை குணப்படுத்தும் இயற்கை வழிகள்

எலுமிச்சையின் இலையினை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் பித்ததினால் உடம்பில் ஏற்படும் சூடானது குறையும்.
ரத்தத்தில் உள்ள பித்தத்தை முழுமையாக குறைக்க அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை நன்கு காய்ச்சி பின் ஆறவைத்து, அந்த நீருடன் சிறிதளவு தேன் கலந்து குடிப்பது நல்லது.
அகத்திகீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
உடலில் பித்த நீர் அதிகமாக சுரப்பதினால் உடலில் ஒரு விதமான மயக்கம் தோன்றும். இதனை சரிசெய்ய இஞ்சியை அரைத்து கிடைக்கும் சாறு மற்றும் வெங்காயச் சாறு ஆகிய இரண்டுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
ஒரு மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
பித்தத்தை தணிக்க வாரத்தில் மூன்று நாள் காலையில் எலுமிச்சை சாதம் சாப்பிடுவது நல்லது.
இஞ்சித் துண்டை சிறிது நேரம் தேனில் ஊறவைத்து அதனை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

No comments:

Post a Comment